இமாசல பிரதேசம் சம்பா அருகே 4.8 ரிக்டர் நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு 55 கி.மீ. கிழக்கில் வெள்ளிக்கிழமை இரவு 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் அலறியடித்து தெருவில் ஓடினர். உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.